தமிழர்களின் மரபுப் பெருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா வரும் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் ஒரு வாரம் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பக்திப் பரவசத்துடன் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள்.
கோயிலை ஒட்டிய மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது தீபத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வாகும்.
இதற்காக, கோயில் பிரகாரங்கள், மற்ற பகுதிகள், மலைப் பாதை ஆகிய இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னூறு பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்களாக செய்யப்பட்டுவரும் இந்த உழவாரப் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிவ பக்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
தரைகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றல், பல்வேறு சன்னதிகளில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய்ப் படிவுகளை நீக்குதல் முதலிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளால் திருவண்ணாமலை சிவன் கோயில் பரபரப்பாகக் காணப்படுகிறது.