Minister Sekarbabu 
தமிழ் நாடு

தூய்மைப் பணியாளர் கோரிக்கை ஏற்பு; போராட்டம் நிறைவு!

Staff Writer

சென்னையில் 165 நாள்களுக்கும் மேலாகப் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து தூய்மைப் பணியாளர் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

சென்னை, அம்பத்தூரில் தனியார் மண்டபத்தில் திரண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் பாபு இன்று முற்பகல் சந்தித்துப் பேசினார். ஐம்பது நாள்களுக்கும் மேலாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களுக்கு பழச்சாறு கொடுத்து அவர்களின் உண்ணாவிரதத்தையும் அவர் முடித்துவைத்தார்.  

பின்னர், தனியார் அரங்கில் திரண்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடையே பேசிய அமைச்சர் சேகர்பாபு, அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட தொழிலாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.