சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக 13ஆவது நாளாக சுமார் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். மேயர் பிரியாவும் வடசென்னையைச் சேர்ந்த அமைச்சர் சேகர்பாபுவும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனிடையே போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தனர். பாடகர் சின்மயி, நடிகர்கள் அம்பிகா, கஸ்தூரி எனப் பலரும் போராட்டக் களத்துக்குச் சென்றது பேசுபொருளானது.
இந்த நிலையில், இவர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்களை அங்கிருந்து சட்டப்படி அப்புறப்படுத்த உத்தரவிட்டது. அனுமதி உள்ள இடங்களில் போராடலாம் என்றும் தெரிவித்துள்ளது.