இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
அதன் விவரம்:
” டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர்
க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன்குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோரைக் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உட்பட்ட பொதுமக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
- தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு
“பாலன் இல்லம்”
எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை,
தியாகராயா நகர், சென்னை - 600 017
அலைபேசி எண் : 98408 54707
மின்னஞ்சல் : cpi.tamilnadu@gmail.com” என்று மு.வீரபாண்டியனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.