முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

தேர்தல் முடிவை மாற்றும் தில்லுமுல்லு- மு.க.ஸ்டாலின் காட்டம்!

Staff Writer

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய, தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது எனக் கூறியுள்ள அவர்,

”மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும்.” என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

”இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயக ரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம். மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம்! நெருப்புடன் விளையாடாதீர்கள்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.