முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிராமச்சந்திரனின் பிறந்த நாள் இன்று என்பதால், அதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரின் ரசிகர்களும் அ.தி.மு.க.வினரும் மலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.
அவரை முன்னிறுத்தி தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், எம்ஜிஆரை நினைவுகூர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், ”தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக,
ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.