தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

விஜய்யின் நாகை பிரச்சாரத்தில் மாற்றம்!

Staff Writer

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் திருச்சி, அரியலூரில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து நாளை நாகப்பட்டினம், திருவாரூரில் அவர் பிரச்சாரம் செய்கிறார். இதற்கான அறிவிப்பை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். 

நாகை புத்தூர் அண்ணா சாலை சந்திப்பில் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் சாலை உலா போக அனுமதிக்கப்படவில்லை. முற்பகலில் 35 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிற்பகல் 3.30 மணிக்கு விஜய் பேசுகிறார்.

விஜய்க்குப் பின்னால் வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.