தமிழ் நாடு

நீலகிரியில் நிலச்சரிவு- பேருந்து சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு!

Staff Writer

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் விடிய விடிய மழை பெய்து, மாவட்டத்தையே கலக்கியெடுத்துள்ளது. 

மேட்டுப்பாளையம் - உதகை மலைச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் காணாமல்போயின. 

மலைச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து கவிழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார். 

குன்னூரில் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஓடியபடி இருக்கிறது. ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.