தமிழ் நாடு

நூல் கொள்முதல்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை- பெ.சண்முகம்

Staff Writer

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதைக் கூறினார். 

அங்கே வைக்கப்பட்டுள்ள மோசடியான, அறிவுக்குப் புறம்பான நூல்கள் திரும்பப்பெற வேண்டும்; இதற்காக தமிழ் அறிஞர்களைக் குழுவாக அமைத்து செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

”நூல் பரிந்துரைக் குழுவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; கொள்முதல் செய்வது, விலை நிர்ணயிப்பது ஆகியவற்றை எல்லாம் அரசாங்கம்தான் முடிவுசெய்யும். எனவே எந்த நூல்கள் எந்தக் காலத்தில் வாங்கப்பட்டிருந்தாலும் இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும் அவர் கூறினார்.  

தி.மு.க.வும் த.வெ.க.வும் மாற்றிமாற்றி குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்; இதனால்தான் புலன்விசாரணை செய்யவேண்டும் என்று கேட்கிறோம் என்றார் சண்முகம்.