கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளான ரயில்பெட்டிகள் மீட்கப்படுகின்றன 
தமிழ் நாடு

பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் ரயிலை இயக்கினேன் - டிரைவர் சுப்பிரமணி!

Staff Writer

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து அந்தத் துறையின் மேலதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இத்துடன், தேசியப் புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ. குழுவினரும் அங்கு முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்குச் சென்ற இரயில்வண்டி பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் சரக்கு ரயில்வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

கவரைப்பேட்டை இரயில்நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின்பேரில் இரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். 

கவனக்குறைவாகச் செயல்பட்டதே விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே தரப்பில் விசாரணை முடியும்முன்னரே கூறப்பட்டுள்ளது. 

விசாரணையின்போது பாக்மதி அதிவிரைவு பயணிகள் இரயில்வண்டியின்ஓட்டுநர் சுப்பிரமணி, தனக்கு பச்சை விளக்கு சிக்னல் தரப்பட்டதால்தான் குறிப்பிட்ட பாதையில் வண்டியை இயக்கியதாகத் தெரிவித்துள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram