பட்டிமன்றப் பேச்சாளர் இராஜா, அண்மையில் அமெரிக்காவுக்குப் போனபோது சாதி பற்றிக் கேட்டதாக சமூக ஊடகத்தில் அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதை மறுத்து அவர் விளக்கக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் சாதி பார்க்கும் அளவுக்குச் சின்னப்புத்தி உள்ளவன் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அட்லாண்டா மாநகரில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தோம். அப்படி வரும்போது பல தமிழ்ச் சொந்தங்கள் வீடுகளில் இருந்து செஞ்சு எங்களுக்காக சாப்பாடு போடுவாங்க. சிலர் நானும் உங்க ஊர்தான்னு சொல்லுவாங்க. அப்படி உணவுப் பேச்சில் செட்டிநாடுதானானு கேட்ட நினைவு இருக்கு. செட்டியாரானு கேக்கலை.” என்று இராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அவருடன் இருந்த பாரதி பாஸ்கரும் இதைப்போலவே, உணவு குறித்ததுதான் பேச்சு என்றும் சாதியைப் பற்றி இடம்பெறவே இல்லை என்றும் கூறியுள்ளார்.