தமிழ் நாடு

பணக்கட்டு பறிமுதல்- உயர்நீதிமன்ற நீதிபதி பதவிவிலகல்

Staff Writer

அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 

அவரைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. 

அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் முனைப்பில் ஈடுபட்டன. 

எதிர்க்கட்சிகளின் கடும் வலியுறுத்தலால் மக்களவைத் தலைவர் இது தொடர்பாக குழு ஒன்றை அமைத்தார். அது தன்னுடைய விசாரணையை முடித்து, அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளதாக இருந்தது.

விரைவில் நாடாளுமன்றம் அவசரமாகக் கூடவுள்ள நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தானாகவே பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக குடியரசுத்தலைவர் முர்முவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.