இராகுல் காந்தி வழக்கு- தயாநிதி விமர்சனம் 
தமிழ் நாடு

பாசிசம் பாயாசம் பேசிய பஞ்ச் நடிகரைக் காணோம்?- தயாநிதி டயலாக்!

Staff Writer

காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் சில நாள்களாக இணைய வாக்குவாதம் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஞானேஸ்குமாருக்கு எதிரான வழக்கைக் குறிப்பிட்டுள்ள தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், “பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?” என்று கலாய்த்துள்ளார். 

”சாதாரணமாகப் பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டுப் போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும் போல…

பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?

காங்கிரஸ் உட்பட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!” என்று தன் சமூக ஊடகப் பதிவில் தயாநிதியும் செம்மையாக டயலாக் அடித்துவிட்டுள்ளார்.