தைலாபுரம் இல்லத்தில் இராமதாஸ், அண்ணாமலை சந்திப்பு
தைலாபுரம் இல்லத்தில் இராமதாஸ், அண்ணாமலை சந்திப்பு 
தமிழ் நாடு

பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி- இராமதாஸ், அண்ணாமலை உடன்பாடு!

Staff Writer

வரும் மக்களவைத் தொகுதியில் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைப்பது உறுதி ஆகியுள்ளது. 

இன்று காலை திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். 

அப்போது இரு கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு காணப்பட்டு, கையெழுத்தானது. இரு கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் உடன்பாட்டைப் பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று நேற்று காலை வரை பேசப்பட்டு வந்த நிலையில், பா.ம.க. பா.ஜ.க.வின் பக்கம் தாவியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.