தமிழ் நாடு

பா.ம.க.வும் தேர்தல் அறிக்கைக் குழுவை அமைத்தது!

Staff Writer

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பா.ம.க.வில் ஒரு குழுவை அக்கட்சியின் தலைவர் அன்புமணி அமைத்திருக்கிறார்.

குழு விவரம்:


1. மருத்துவர் இரா. செந்தில் - குழுத் தலைவர்
முன்னாள் மக்களவை உறுப்பினர்

2. முனைவர் அரங்க வேலு இ.ஆ.ப (ஓய்வு)
முன்னாள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்

3. முனைவர் கோ. தன்ராஜ்
முன்னாள் மக்களவை உறுப்பினர்

4. வழக்கறிஞர் கே.பாலு
செய்தித் தொடர்பாளர்

5. கோ. ஆலயமணி
தலைவர், தமிழ்நாடு உழவர் பேரியக்கம்

6. இர. அருள்
செயலாளர், பசுமைத் தாயகம்

7. கே. பொன்மலை
சமூக முன்னேற்ற சங்கம்

பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களின்  கருத்துகளை அறிந்து இக்குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து கட்சித் தலைமையிடம் அளிக்கும்.

கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெளியிடுவார். 

பா.ம.க. தலைமைநிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.