தமிழ் நாடு

பிரதமரைச் சந்திக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Staff Writer

தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகிறார். அவரிடம் தமிழகத்துக்கான கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் மனு அளிக்கிறார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்:

“ மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.” என்று அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.