பிரதமர் நரேந்திர மோடி 
தமிழ் நாடு

பிரதமர் வருகை- போக்குவரத்தில் காலை-மாலை என்ன மாற்றம்?

Staff Writer

பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக  செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறையின் செய்திக்குறிப்பு:

”பிரதமர் 23.01.2026 அன்று பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் GST நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை GST சாலையில் சென்னை திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி சென்னை மாரக்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 0700 மணி முதல் மாலை 0700 மணி வரை

சென்னை to திண்டிவனம் மார்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து GST சாலையை அடையலாம்

(அல்லது)

சென்னை to திண்டிவனம் மார்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர் படப்பை ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக GST சாலையை அடையலாம்.

(அல்லது)

திருப்பெரும்பதூர். ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் விழுப்புரம் சென்று GST சாலையை அடையலாம்.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 0700 மணி முதல் மாலை 0700 மணி வரை

1) திருச்சியிலிருந்து சென்னை மார்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர். திருவண்ணாமலை, வந்தவாசி காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.

2) சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவி மங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை திருவண்ணாமலை, வந்தவாசி காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

3) கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி. காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

4) திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 1100 மணி முதல் மாலை 0700

மணி வரை

சென்னையிலிருந்து திண்டிவனம் மார்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று GST சாலையை அடையலாம்

(அல்லது)

வண்டலூர் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று GST சாலையை அடையலாம்.

(அல்லது)

1) கூடுவாஞ்சேரி - மறைமலைநகர் SP கோவிலில் இருந்து விழுப்புரம் மார்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு திருக்கழுக்குன்றம் வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம் திண்டிவனம் வழியாகவும் GST சாலையை அடையலாம்.

2) சிங்கபெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் GST சாலையை அடையலாம்.

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 1100 மணி முதல் மாலை 0700

மணி வரை

விழுப்புரத்திலிருந்து சென்னை மார்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.

(அல்லது)

திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் வாலாஜாபாத் வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்.

(அல்லது)

திண்டிவனம் -கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலார் சந்திப்பு) - கீழம்பி புற வழிச்சாலை GWT சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லாம்.” என்று செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.