முதல்வர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

மதுரைக்கு என்ன தேவை?- முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Staff Writer

திருப்பரங்குன்ற விவகாரத்தில் மாநில அரசு மதவாத அமைப்பினரை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையீட்டுக்கு மேல் முறையீடாகச் செய்துவருகிறது.

அரசின் சார்பில் மூத்த அமைச்சர் இரகுபதியும் நேற்று விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு குறிப்பைப் பதிந்துள்ளார்.

அதில்,  

”மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

 மக்கள் முடிவு செய்வார்கள்.

 மெட்ரோ இரயில்,

 AIIMS,

புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.