ஸ்ரீகாந்தி/ காந்திமதி இராமதாஸ் 
தமிழ் நாடு

மாணவியிடம் போலீஸ் சீண்டல்- இராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி அறிக்கை

Staff Writer

பா.ம.க. உட்கட்சிக் குழப்படிகளுக்கு மத்தியில் செயல்தலைவராக இராமதாசாக அறிவிக்கப்பட்டுள்ள அவரின் மகள் ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி பெயரில் இன்று முதலில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை மீது பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தொடர உடனடி நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

“விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணி செய்த இளங்கோவன் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த காவலரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர் என்ற செய்தியை அறியும் போது வேதனை அளிக்கிறது. 

பொது மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையிலேயே இது போன்ற ஒரு சில நபர்கள் இருந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களை செய்வது தொடர் நிகழ்வாக உள்ளது. சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அந்த மாவட்ட காவல் துறை மேற்கொண்டது அதை தொடர்ந்து மீண்டும் குறுகிய காலத்திற்குள் இப்போது திண்டிவனத்தில் நடந்த இந்த சம்பவம் ஏற்புடையது அல்ல.

இது போன்ற சம்பவங்களை தொடர்ந்து கேள்விப்படும் போது பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு ஏதேனும் அந்த பகுதிகளில் சமூக விரோதிகளால் பிரச்சனை ஏற்படும் போது அவற்றை நம்பிக்கையுடன் அந்த பகுதி காவலர்களுடன் பாதுகாப்பிற்கு புகாராக பகிர்ந்து கொள்ள அச்ச உணர்வு ஏற்படும். இதனால் இளம் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்ச உணர்வு ஏற்படுத்தும் சூழல் தமிழகத்தில் ஏற்படும். இவற்றைப் போக்க வேண்டும் என்றால் தமிழக காவல்துறை உடனடியாக இதுபோன்ற பெண்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுகின்ற நபர்களை காவல் துறையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவர்களை பொது வெளியில் பணி செய்ய அனுமதிக்க கூடாது . 

பெண்களுக்கு எதிரான புகார்களுக்கு ஆளான காவலர்கள் மீது முழுமையான விசாரணையை  உடனே நடத்தி  உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த நடவடிக்கை இது போன்ற தவறுகள் நடப்பதை தடுக்க ஒட்டுமொத்த காவலர்களுக்கும் துறை ரீதியிலான புத்தாக்க பயிற்ச்சிகளை மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெண்களுக்குஎதிரானபாலியல்சீண்டல்வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ளகாவலர்களைஉடனடியாககாவல்துறைபணியில்இருந்துநிரந்தரமாகவிடுவிக்கவேண்டும்.மீண்டும்அவர்களுக்குகாவல்துறையில்பணிவழங்கக்கூடாது.இதுபோன்றகடுமையானநடவடிக்கைகளைமேற்கொண்டால்தமிழககாவல்துறைக்குதமிழகமக்கள்மத்தியில்அச்சம்நீங்கிநம்பிக்கைஏற்படும்.ஆகவேதமிழகபெண்கள்மற்றும்பள்ளி,கல்லூரிமாணவிகள்மத்தியில்தமிழககாவல்துறைக்குஇருக்கின்ற நம்பிக்கையைதொடர்ந்திட உரியநடவடிக்கையைதமிழககாவல்துறைமேற்கொள்ளவேண்டும்.அதற்கானமுழுமுயற்சியையும்தமிழககாவல்துறையும்,தமிழகஅரசும்உடனடியாகமேற்கொள்ளவேண்டும்.” என்றும் காந்திமதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.