மின்சார வாரியம் 
தமிழ் நாடு

மின்சார அதிர்ச்சி... 3.7 இலட்சம் பேருக்கு கூடுதல் கட்டணம்!

Staff Writer

தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்தைவிட ஜூலை மாதத்தில் 3.7 இலட்சம் மின்சார நுகர்வோருக்கு பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

மின்சார வாரியத் தலைவர் அருண்ராய் அனைத்து மண்டல மின்வாரியப் பொறியாளர்களுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அடுத்த மாதம் ஏழாம் தேதிக்குள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி அவர் அதில் அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த ஆண்டிலும் அதற்குமுந்தைய ஆண்டிலும்  இதேபோல கோடை காலத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலாக கட்டணம் காட்டியது. இந்த ஆண்டில் இது மிகப் பெரிய அளவுக்கு நேர்ந்துள்ளதால் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது. 

முதலில், நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் இதுகுறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.