தூய்மைப் பணியாளரை மின்சாரம் தாக்கியதில் மரணம் 
தமிழ் நாடு

மின்சாரம் தாக்கி காலைப் பணியில் தூய்மைப் பணியாளர் மரணம்!

Staff Writer

சென்னையில் அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். 

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் வழக்கம்போல அதிகாலையில் துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வரலட்சுமி என்பவர் துப்புரவு செய்த இடத்தில், தேங்கியிருந்த மழை நீரில் மின்சார ஒயர் அறுந்துவிழுந்திருந்து மின்சாரம் கசிந்தபடி இருந்தது. அதை அறியாத அவர் மின்சாரம் தாக்கி துடிதுடித்தபடி உயிரிழந்தார். 

சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்திய உழைப்போர் உரிமை இயக்கம், இதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.