மின்னல் தாக்கியதில் விவசாய நிலத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இந்தத் துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
வேப்பூர் கிராமத்தில் அவர்கள் இன்று பகலில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் வெட்டியதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாள்களாக மழை பெய்துகொண்டிருந்தபோதும் அவர்கள் இடைவெளி விட்டதால், மழை நின்றுவிட்டது எனக் கருதி வேலையில் இறங்கினார்கள்.
கெடுவாய்ப்பாக மின்னல் தாக்கியதில் நான்கு பெண்களும் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டும் இதே மாதத்தில் கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.