துறையூர் விவகாரத்தில் கோரிக்கை அளிக்கச்சென்ற கார்த்திக் என்பவரை சட்டப்பேரவைத் துணைத்தலைவர் இரவிசங்கர் தாக்கினார் எனப் பிரச்னை ஆகியுள்ளது.
இதில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கார்த்திக் பின்னர் சமாதானம் ஆகிவிட்டதாக சமூக ஊடகங்களில் காணொலி வெளியானது.
அதன்பிறகு கார்த்திக் அதை மறுத்து புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், இரவிசங்கரும் காவல்துறை ஆய்வாளரும் தன்னை மிரட்டியே இப்படிக் கூறவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவிசங்கர் தன் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.