பா.ம.க. நிறுவனர் இராமதாசின் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படும். கட்சியின் தலைமை நிர்வாகிகள், குடும்பத்தினருடன் பொங்கல் நிகழ்வில் இராமதாசு முக்கியமாகப் பங்கேற்பார்.
இதுவரை அவரின் மகன் அன்புமணியும் தவறாமல் தைலாபுரம் தோட்டத்துப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு வந்தார்.
இடையில், தந்தைக்கும் மகனுக்கும் பிரச்னையாகி தில்லிவரை தேர்தல் ஆணையத்தில் கட்சி யாருக்கு என உச்சகட்டத்துக்குப் போனது.
இந்தப் பின்னணியில் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அன்புமணியும் அவரின் குடும்பத்தினரும் கலந்துகொள்ளவில்லை. அன்புமணி கலந்துகொள்ளாத முதல் தைலாபுரப் பொங்கலாக இது அமைந்துவிட்டது என பா.ம.க.வினர் வருத்தத்துடன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்.