முன்னாள் எம்.பி. சத்தியபாமா 
தமிழ் நாடு

முன்னாள் எம்.பி. சத்தியபாமா உட்பட 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் - பழனிசாமி அதிரடி

Staff Writer

செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமா உள்ளிட்ட 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

இதையடுத்து, ‘எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்’ என செங்கோட்டையன் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

கடந்த 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் சென்றதையும், டிடிவி தினகரனுடன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்ததையும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். சொன்னபடியே செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் "தி.மு.க.வைப் போல அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்.பி சத்தியபாமா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உட்பட 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு