முருங்கை 
தமிழ் நாடு

முருங்கைக் காய் விலை உயர்வுக்குப் பின்னால்!

Staff Writer

தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல நகரங்களிலும் முருங்கையின் வரத்து குறைந்துள்ளது. மேலும், பனிக் காலம் என்பதால் முருங்கைக் காய்கள் ஒருவிதமாக கார் படிந்து சுவையும் சிறுகசப்புடனே வருகின்றன. 

இந்த நிலையில், முருங்கைக் காயின் விலையும் சந்தையில் அதிகரித்துள்ளது. 

சென்னைக்கும் திருவனந்தபுரம் போன்ற வெளி மாநில நகரங்களுக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனிச் சந்தையிலிருந்து முருங்கை அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சி அம்மாபட்டி, காவேரி அம்மாபட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை என சுற்றியுள்ள ஊர்களில் முருங்கையின் விலை கிலோவுக்கு 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.