சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு வழங்குவதற்கான மையம், மத்திய மெட்ரோ நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இதைத் திறந்துவைத்தார்.
பயணிகள் பொருட்களைத் தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொறுப்பேற்காது என்றாலும், பயணத்தின் போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது மீட்கப்பட்ட பொருட்கள் அலுவலகம் மூலமாகவோ பெற முடியும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா, (இயக்கம் - பராமரிப்பு), பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் - பராமரிப்பு) உட்பட சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டன. தவறவிடப்பட்ட பொருட்களில் இப்படி 74% பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதியையும் தடையற்ற அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்குத் தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: LFO@cmrl.in
இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry