சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையான காரைக்காடு சோதனைச்சாவடி யில் பணியிலிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த காவலர்கள் மீது மது போதையில் இருந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கடப்பாறை முதலிய ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோவை திருப்பூர் போன்ற பல்வேறு நகரங்களில் வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து பல்வேறு சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்து வரும் நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.” என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு கைது செய்துதிருப்பதை வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் பெருகி வரும் வட மாநிலத்தவர் வருகையையும், குடியேற்றங்களையும் நெறிமுறை படுத்த வேண்டுமேன்றும்,உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவர்கள் வருகை மற்றும் குடியேற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமேன்றும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போன்று உள்நுழைவுச்சிட்டு அனுமதி முறையையும் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.