வங்கக் கடலில் உருவாகவுள்ள மோன்தா புயல் காரணமாக, வட தமிழ்நாட்டில் நாளைமறுநாளும் அதற்கடுத்த நாளும் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
பின்னர், தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக் கடலில் 27ஆம் தேதியன்று புயலாக உருவெடுக்கும்.
புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்தாலும் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.