எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

யார் ஊழல் சக்தி?- விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

Staff Writer

ஊழல் சக்தி என அ.தி.மு.க.வை மறைமுகமாக விஜய் சாடிய நிலையில், யாரைப் பார்த்து அப்படிச் சொல்வது என எடப்பாடி பழனிசாமி எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யின் குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். 

விஜய் தன்னுடைய ரோல் மாடல்களில் ஒருவராக ஜெயலலிதாவைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் அப்படி ஏற்றுக்கொண்டவர் யாரை அப்படிச் சொல்கிறார் எனக் கேட்ட எடப்பாடி பழனிசாமி,

“த.வெ.க.வில் சேர்ந்த ஒருவர் (செங்கோட்டையன்) பெயரைச் சொல்லக்கூட தான் விரும்பவில்லை; ஊழல் வழக்கில் சிறைக்குப் போய்விட்டு வந்தவர்; என் மீது ஊழல் வழக்கு போடப்பட்டு குற்றமில்லாதவன் என வெளியில் வந்தவன் நான்” என்றும் கூறினார்.

விஜய்யை முதலில் செய்தியாளர் சந்திப்பில் பேசச் சொல்லுங்கள்; வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே அவருக்குத் தெரியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.