உதயநிதி 
தமிழ் நாடு

ரீல்ஸ் அமைச்சரின் விளம்பர வெறி... உதயநிதி கண்டனம்!

Staff Writer

அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கூறியுள்ளார்.

“அது சுத்த கூறுகெட்டத்தனம்” எனப் பொருள்படும்படியாக ஆங்கிலத்திலும் இடையில் ஒரு வாசகத்தை உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.  

”மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் வகுப்பு எடுக்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.” என்றும் உதயநிதியின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.