சென்னையில் தியாகராயர் நகர் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர், தன் பணியின்போது 45 சவரன் நகைப் பை ஒன்றைக் கண்டார். அதை மாம்பலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர், அவற்றின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் அவருக்கு அரசுத் தரப்பில் பாராட்டு தெரிவித்து பரிசளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்மாவையும் ஏற்கெனவே ஒரு இலட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த அவரின் கணவரையும் நேரில் வரவழைத்துப் பாராட்டினார். அத்துடன் அவர்களின் நற்செயலைப் பாராட்டி ஒரு இலட்சம் ரூபாய் பரிசாகவும் வழங்கினார்.