முந்தைய தி.மு.க. ஆட்சியில் பணி நியமனத்துக்கு இலஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அதன்படி அவர் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிய நடவடிக்கை மேற்கொண்டது.
2,538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதில் அனுமதி தரக்கூடாது என கே.என்.நேரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை
அந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.