கே.என். நேரு வீடு, சென்னை 
தமிழ் நாடு

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- கே.என். நேரு விளக்கம்

Staff Writer

தன் மீதான இலஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு இன்று பிற்பகலில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். 

கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் டெண்டர் விட்டதில் ஊழல் செய்யப்பட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அது தொடர்பாக, நேரு தொடர்புடைய இடங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தேடுதல் சோதனை நடைபெற்றது.

அது முடிவடைந்தபின்னர் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” சென்னை, திருச்சியில் உள்ள என் வீடுகள், என் தம்பியின் அலுவலகம், உதவியாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் ஒரு கோப்பை எடுத்துக்கொண்டார்கள். தம்பியின் அலுவலகத்தில் ஒரு துண்டுச் சீட்டையும் எடுத்திருக்கிறார்கள். கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். அரசியல்ரீதியாகப் பழிவாங்கவும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.” என்று கூறினார்.