தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழமுக்கமானது மேற்கு- வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அது, தெற்கு வங்கக் கடலின் மையப் பகுதியில் உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி, தமிழ்நாட்டில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு. வரும் 25ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.