தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த (வட இந்திய) தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் சட்ட சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று சிபிஎம் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியூ-வின் 16வது மாநில மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற சிஐடியூ-வின் 16வது மாநில மாநாட்டடில், “தமிழ்நாடு மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்; தேசிய பஞ்சாலைகளை இயக்கிடவும் பணி நிரந்தரம் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்மைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ” தமிழகத்தில் அஸ்ஸாம்,மேற்கு வங்கம், பீகார், உ.பி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் இருந்து வந்து தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள், கட்டுமானம், விவ்சாயம் போன்ற பணிகளில் பணியாற்ற வருகின்றனர்; மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயரும் சட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்து அவர்களுக்கு சட்ட ரீதியான சலுகைகளை வழங்கிட வேண்டும்; அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு நேர பாடசாலை அமைத்து கல்வி வழங்க வேண்டும் என்றும் சிஐடியூ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.