தமிழ் நாடு

வருகிறது சக்தி புயல்- ஆனால் கடலுக்கு உள்ளேயே...!

Staff Writer

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொண்டுள்ள சூழலில், அரபிக் கடலில் சக்தி எனும் புயல் உருவாகி வருகிறது. 

வடகிழக்கு அரபிக் கடலில் உண்டான இந்தப் புயல், நாளைமறுநாள் அக்டோபர் 6ஆம் தேதி அன்று புயலாக உருவெடுக்கும். 

ஆனால், மறுநாளே அது கடலுக்கு உள்ளேயே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு இழந்து அங்கேயே நின்றுவிடும். 

கரைக்கே வர வாய்ப்பில்லை என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.