தமிழ் நாடு

வாக்காளர் தீவிரத் திருத்தம் - 98.23% படிவங்கள் பதிவேற்றம்!

Staff Writer

தமிழ்நாட்டில் இன்றுவரை 98 சதவீத வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்கள் தேர்தல் ஆணையத்தால் இணையப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாநிலத்தில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்றுவரை பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 41 இலட்சத்து 14 ஆயிரத்து 587 பேர்.

இவர்களில் 6,39,95,854 பேருக்கு தீவிர சிறப்புத் திருத்தத்துக்கான கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் ஆணையத்தின் தகவல்.

அதாவது, 99.81% பேருக்கு அந்தப் படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏராளமானவர்கள்தங்களுக்கு படிவம் வழங்கப்படவில்லை எனப் புகார்களும் கூறப்படுகின்றன. 

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிவரை 6,29,79,208 படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.