தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளும் பணி வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நேற்று தி.மு.க. கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டணித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நவம்பர் 2ஆம் தேதி இதுகுறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.