கோவிந்த வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்துவருகிறது. அந்தக் கூட்டணியிலேயே சிறு கட்சியாக உள்ள த.மா.கா.வுடன் பேச்சாளர் தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சி இணைந்தது.
ஈரோட்டில் இன்று இணைப்பு விழா நடைபெற்றது.
இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மணியன், நடிகர் விஜய் தனக்கு 20 சதவீதம் வாக்குகளை வைத்து முதல்வராகிவிட முடியாது; பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கைகோக்க வேண்டும் என்று கூறினார்.