திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 தொகுதிகள் பொதுத்தொகுதி ஆகும்.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீட்டை திமுக ஏறக்குறைய இறுதி செய்துவிட்டது. காங்கிரஸ், முஸ்லீம் லீக், மமக, கொமதேக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கான ஒதுக்கீட்டை திமுக இறுதி செய்த நிலையில், இன்று விசிகவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவருமான முதல்வருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இந்த தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிமுகவுடன் நாளை தொகுதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.