தமிழ் நாடு

விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை- அ.தி.மு.க.

Staff Writer

த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் சென்னை அரசு இல்லத்தில் இன்று மாலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “ த.வெ.க. ஆட்சியமைக்க அ.தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதைப் போல செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் தவறானது. அ.தி.மு.க. மிகப் பெரிய இயக்கம். எந்த சூழ்நிலையிலும் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை.” என்று முனுசாமி கூறினார்.

பழனிசாமியின் அனுமதியுடன் இதைக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.