தமிழ் நாடு

விஜய் கட்சி தொடங்கியதற்கு அண்ணாமலை வாழ்த்து!

Staff Writer

நடிகர் விஜய் புதிதாக கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

“ தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு @actorvijay அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.