முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக ஒரு வாரத்துக்கு ஜெர்மன், பிரிட்டன் நாடுகளுக்கு இன்று பயணம் புறப்பட்டார். இன்று காலையில் புறப்படும் முன்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் விஜய்யின் அரசியல் பற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லையே என செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு ஸ்டாலின், அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மேலும், வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு த.வெ.க.தான் போட்டி என விஜய் கூறியிருக்கிறார்; இந்தச் சவாலை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு,“ நான் அதிகம் பேசமாட்டேன். பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையைக் காட்டவேண்டும். இதற்கு நான் பேசவேண்டிய அவசியமில்லை.” என்று ஸ்டாலின் கூறினார்.