நாகையில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீட்டுக்குப் போனாரா, வெளிநாட்டில் முதலீடு செய்யப் போனாரா என்கிறபடி பொடி வைத்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அதற்குப் பதில் அளித்து, காணொலி விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜெர்மன் நாட்டில் தன்னுடைய பயணத்தில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததாகவும் விவரங்களுடன் விவரித்துள்ளார்.
”ஜெர்மனியின் என்ஆர்டபிள்யூ மாநில முதன்மை அமைச்சரைச் சந்திக்கச் சென்றபோது, அவர்களின் கான்வாயில் என்னை அழைத்துக் கொடுத்த வரவேற்பில் எந்த அளவுக்கு தமிழகத்தை மதிக்கிறார்கள் என்பது தெரிந்தது.” என்றும்,
”முதலீட்டாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிகமாக வேலை அளிப்பதையும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டுசெல்வதையும் ஒரு துறையில் மட்டுமின்றி பல துறைகளிலும் வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் கவனம் செலுத்துவதையும் அவர்கள் அதிகமாகப் பாராட்டினார்கள்; பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்யவும் ஆர்வமாக இருக்கிறார்கள்; இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.