டிடிவி தினகரன் 
தமிழ் நாடு

விஜய் தலைமையில் புதிய கூட்டணி- தினகரன் தகவல்

Staff Writer

விஜய்யின் த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இதைத் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், “நான்கு கூட்டணிகள் அமையும். சீமான் தனியாகவும், தி.மு.க. தலைமையில் ஒன்றும், தே.ஜ.கூட்டணியும் விஜய்யுமாக இந்தக் கூட்டணிகள் இருக்கும்.” என்று கூறிய தினகரன்,

“புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது” என்றும் கூறினார்.

அவருடைய கட்சி எப்படியான கூட்டணியில் இணையவுள்ளது என்பதைப் பற்றிக் கேட்டதற்கு, அவர் பிடி கொடுக்காமல் மழுப்பலாகவே பதில் அளித்தார்.