விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் வீட்டிலேயே பட்டாசு தயாரித்ததில் இன்று வெடிப்பு ஏற்பட்டு 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே விஜய கரிசல்குளம் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
இதில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் பெண்கள்.
காயமடைந்த இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.