தீபாவளி 
தமிழ் நாடு

ஹேய் ஜாலி... தீபாவளிக்கு 2 நாள் லீவு!

Staff Writer

தீபாவளித் திருவிழா அடுத்த மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல இப்போதே தயாராகி வருகிறார்கள். 

ஆனால் என்ன ஒரே வருத்தமாக இருந்தது... ஞாயிறு அன்று பண்டிகை என்பதால் கூடுதலாக விடுப்பு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டு அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு இது பொருந்தும். 

அதேசமயம், இந்த விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 28 அன்று வேலை நாளாக வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.