நடிகர் விஜய் 
செய்திகள்

தைப்பூசம்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Staff Writer

தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகனின் அறுபடைவீடுகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம் என்று தவெக தலைவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

தனித்துயர்ந்த

குன்றுகள் தோறும்

வீற்றிருக்கும்

தமிழ்நிலக் கடவுள்;

உலகெங்கும் வாழும்

தமிழர்களின்

தனிப்பெரும் கடவுள்

முருகப் பெருமானைப்

போற்றுவோம்!

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.