தலைவன் தலைவி திரைப்படம் 
செய்திகள்

தலைவன் தலைவி... உலகளவில் ரூ.50 கோடி வசூலித்து அசத்தல்!

Staff Writer

பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெலுங்கில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.

தற்போது, இப்படத்திற்கான திரைகளும் காட்சிகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.